சிலோன் மீடியா போரத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
News

சிலோன் மீடியா போரத்தின் (Ceylon Media Forum) வருடாந்த பொதுக்கூட்டமும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் நேற்று சனிக்கிழமை (18) சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில், அமைப்பினுடைய அடுத்த இரு வருடங்களுக்கான தலைவராக ஊடகவியலாளர் ரியாத் ஏ. மஜீட் ஒருமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, அமைப்பின் செயலாளராக ஊடகவியலாளர் நூறுல் ஹுதா உமர், பொருளாளராக ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், தேசிய அமைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.வை. அமீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, உப தலைவர்களாக எம்.எம். ஜபீர் மற்றும் எஸ். தஸ்தஹீர், உப செயலாளராக எம்.என்.எம். அப்ராஸ், கணக்குப் பரிசோதகராக எம்.பி.எம். ரிம்ஸான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக சி.எம்.யு. தாரிக், எம். தினேஷ், ஹிஷாம் ஏ. பாவா, என்.எம். சிராஜ், எம்.பி.எம். ராஜீத், எம்.சி. சம்சுல் முனா மற்றும் எஸ். ஜனூஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகக் குழு, பிராந்திய ஊடகவியலாளர்களின் நலன்கள், தொழில்முறை மேம்பாடு, ஊடகப் பயிற்சிகள், நலத்திட்டங்கள் மற்றும் ஊடகத் துறையின் தரத்தை உயர்த்தும் பல்வேறு செயற்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கவுள்ளதாக பொதுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் உறுப்பினர்கள், சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நூருல் ஹுதா உமர்