கல்விமாணி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப் ...
News
கல்விமாணி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப் புதிய திருத்தம்!
இலங்கை ஆசிரியர் சேவையில் கல்விமாணி பட்டதாரிகளை (B.Ed. Graduates) இணைத்துக்கொள்வதில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், புதிய ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் கல்வி அமைச்சில் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைய குறித்த சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட உடனேயே, கல்விமாணி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
இதற்கிடையில், ஆசிரியர் பயிற்சி, தேசிய கல்வியியல் கல்லூரிகளின் அபிவிருத்தி மற்றும் ஆசிரியர், அதிபர் உள்ளடங்கலாக ஆறு சேவைகளின் தொழில்சார் தரத்தை உயர்த்துவதற்காக 'கல்வித் தொழில்சார் பேரவை' (Education Professional Council) ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.