ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் புதிய சட்டம...
News
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களுடன் தொடர்புடைய தீவிர குற்றங்களைத் தடுத்தல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடர்தல் போன்ற நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் சட்டமூலம்' வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலமானது, எல்லை கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைக்கு சட்டப்பூர்வ வடிவம் கொடுப்பதையும், சர்வதேச மற்றும் தேசிய அளவில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்களால் சமுதாயத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் இத்தகைய குற்றங்களைத் தடுத்தல், விசாரணை செய்தல் மற்றும் தண்டனை பெற்றுத் தருதல் தொடர்பான பிற முக்கிய சரத்துக்களையும் இந்தச் சட்டமூலம் உள்ளடக்கியுள்ளது.
இதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவொன்றில் உறுப்பினராகச் செயற்படுவோருக்கு மேல் நீதிமன்றத்தால் 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 10 இலட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கமையவே இந்த புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.