லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் புதிய மாற்றம்! - ...
News
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் புதிய மாற்றம்!
லிட்ரோ நிறுவனம் வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. புதிய விலைகள் இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதிய விலைத் திருத்தத்தின்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதன் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலையும் 42 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த சிலிண்டரின் புதிய விலை 1,750 ரூபாவாகும்.
மேலும், 2.3 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலையில் 20 ரூபா குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் புதிய விற்பனை விலை 815 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.