New Updates! Fresh news just arrived.

அரச நிறுவனங்களுக்கு தரவு பாதுகாப்பு தொடர்பில் புதிய சுற்ற...

News

அரச நிறுவனங்களுக்கு தரவு பாதுகாப்பு தொடர்பில் புதிய சுற்றறிக்கை

August 8, 2026 7:15 am
அரச நிறுவனங்களுக்கு தரவு பாதுகாப்பு தொடர்பில் புதிய சுற்றறிக்கை
தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை அரச நிறுவனங்கள் மேற்கொள்ளும் வகையில், தரவு பாதுகாப்பு அதிகாரசபை புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்கள் முதல் மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ நிறுவனங்கள், அரசுடைமை நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் வரை இந்த வழிகாட்டல் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை சேகரித்தல், பயன்படுத்துதல், சேமித்தல் மற்றும் செயலாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் அரச நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டரீதியான நடைமுறைகள் தொடர்பிலும் சுற்றறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய சட்டத்திற்கு அரச நிறுவனங்கள் முறையாக இணங்கிச் செயற்படுவதற்குத் தேவையான நடைமுறை நடவடிக்கைகள் குறித்தும் இதில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய விதிகள் எதிர்வரும் 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தேவையான தயார்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தரவு பாதுகாப்பு அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

சட்டம் அமலுக்கு வரும் காலக்கெடுவை கருத்திற்கொண்டு, தயார்படுத்தல் பணிகளில் தாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now