New Updates! Fresh news just arrived.

பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பா...

News

பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய சுற்றுநிருபம்!

January 30, 2026 10:48 pm
பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய சுற்றுநிருபம்!
அனர்த்த பாதிப்பு காரணமாக முடங்கியுள்ள வர்த்தகங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய சுற்றுநிருபமொன்றைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், 2026.01.22 அன்று வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025(iii) இன் கீழ் முன்மொழியப்பட்ட, 'அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் திட்டத்தில்' குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தகச் சேதங்களுக்கான கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ள முறையிலும் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2025 நவம்பர் 21 முதல் 2025 டிசம்பர் 31 வரை நிலவிய பாரிய அனர்த்த நிலைமையின் போது ஏற்பட்ட வர்த்தகச் சேதங்கள் இதற்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now