New Updates! Fresh news just arrived.

அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வ...

News

அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

March 17, 2026 2:46 pm
அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளினை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களினை நடாத்திச் செல்வது தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சுற்றுநிருபம் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் யாப்பு சபைகளினுடைய தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வழங்கப்பட்டிருக்கின்ற விடுமுறை காரணமாக, அன்றைய தினத்திற்குரிய பணிகளினை வாரத்தின் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், ஏதேனும் ஒரு அதிகாரியினை புதன்கிழமை சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என நிறுவனத் தலைவர் தீர்மானித்தால், குறித்த அதிகாரிகளினை சேவைக்கு அழைப்பதற்குத் தடையில்லை. ஆனால் அதற்காக விடுமுறை தின சம்பளம், மேலதிக நேர கொடுப்பனவு அல்லது பதில் விடுமுறை வழங்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, புதன்கிழமைகளில் மூடப்படும் அலுவலகங்களினுடைய அதிகாரிகள், குறித்த வாரத்தின் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினங்களில் மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பளம் அல்லது பதில் விடுமுறை அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்படவும் கூடாது.

இருப்பினும், சேவையினுடைய அவசரத் தேவை கருதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை தினங்களில் அதிகாரிகளினை சேவைக்கு அழைக்க வேண்டிய அவசியம் ஏற்படுமானால், சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் / மாகாண பிரதம செயலாளர் / திணைக்களத் தலைவர் அல்லது அரச கூட்டுத்தாபனத் தலைவர்களினுடைய அனுமதியோடு குறித்த அதிகாரிகளை சேவைக்கு அழைப்பதற்குத் தடையில்லை எனவும் குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சேவைக்கு அழைக்கப்படுகின்ற அதிகாரிகளுக்கு மேலதிக நேர கொடுப்பனவு, விடுமுறை தின சம்பளம் அல்லது பதில் விடுமுறை வழங்குவதற்குத் தடையில்லை எனவும் குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now