அஸ்வெசும பெறுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனை...
News
அஸ்வெசும பெறுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனை!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு, தமது பெயரில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்டுள்ள நிதி விபரங்களை வெளிப்படுத்தும் சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் போது, சிலர் தமது நிதிச் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாகவே இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவெலகெதர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தற்போதைய பயனாளிகள், புதிய விண்ணப்பதாரிகள் மற்றும் அஸ்வெசும தொடர்பில் மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ள அனைவரும் இச்சத்தியக்கடதாசியைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டிக்குப் பணம் வழங்குதல் போன்ற வெளிப்படுத்தப்படாத வருமான மூலங்கள் ஊடாகப் பணம் ஈட்டி, சாதாரண கணக்கெடுப்புகளின் போது தெரியவராத வகையில் வங்கிக் கணக்குகளில் நிதியைச் சேமித்து வைக்கும் சிலர் தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு மறைக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டாலோ அல்லது தகவல்கள் வெளிப்பட்டாலோ, முறைமை ஊடாகத் தமது வங்கிக் கணக்குகளைப் பரிசோதிப்பதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் சத்தியக்கடதாசியை விண்ணப்பதாரிகள் கட்டாயம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உண்மையிலேயே மிகவும் தேவையுடையவர்களுக்கு இந்த நிதியை நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பது தமது பொறுப்பு என்பதால் இந்நடவடிக்கை அவசியமானது என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவெலகெதர மேலும் தெரிவித்துள்ளார்.