சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் 2027ஆம் ஆண்டுக்கான ...
News
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடநெறிகள் அறிமுகம்!
தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், முழுநேர மற்றும் பகுதிநேர அடிப்படையில் பல்வேறு தொழில்நுட்ப, தொழிற்கல்விப் பாடநெறிகள் நடத்தப்படவுள்ளன.
இலங்கை தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் (DTET) கீழ் இயங்கும் இக்கல்லூரியில், NVQ மட்டம் 4, 5 மற்றும் 6 ஆகிய தகுதி மட்டங்களில் இப்பாடநெறிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, Construction Technology, Quantity Surveying, ICT, Agriculture Production Technology உள்ளிட்ட துறைகளில் டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகள் நடத்தப்படவுள்ளன.
மேலும், தமிழ் மொழிமூலமான பாலர் பாடசாலை ஆசிரியர் பயிற்சி (Early Childhood Development) மற்றும் இணையத்தள மென்பொருள் உருவாக்குநர் (Web Developer) ஆகிய NVQ மட்டம் 4 பாடநெறிகளும் பகுதிநேரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பாடநெறிகளைப் பொறுத்து 6 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையான பயிற்சிக் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிமூலமான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
இப்பாடநெறிகள் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரை 067-2260933 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்.
அத்துடன், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி அல்லது www.dtet.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.