ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய தூத...
News
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய தூதரகப் பிரதிநிதிகள்!
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்களினுடைய நற்சான்றிதழ் பத்திரங்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
பப்புவா நியூ கினியா சுதந்திர நாட்டினுடைய உயர்ஸ்தானிகராக Vincent Sumale அவர்களும், சோமாலிய பெரடல் குடியரசினுடைய தூதுவராக Abdullahi Mohammed Odowa மற்றும் லக்சம்பர்க் குடியரசினுடைய தூதுவராக Christian Biever, வத்திக்கானினுடைய அப்போஸ்தலிக்க தூதுவராக Monsignor Andrzej Józwowicz, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசினுடைய உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) Nayyar Naseer மற்றும் குவைத் நாட்டின் தூதுவராக Saleh Mubarak Al-Sarawi ஆகியோர் தமது நற்சான்றுப் பத்திரங்களினை கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களுடன் ஜனாதிபதி சுமூகமான உரையாடலில் ஈடுபட்டதுடன், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் குறித்த சந்திப்பில் பங்கேற்றனர்.