New Updates! Fresh news just arrived.

வாட்ஸ்அப் மூலம் புதிய மோசடி: இலங்கை கணினி அவசர தயார்நிலைக...

News

வாட்ஸ்அப் மூலம் புதிய மோசடி: இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு அவசர எச்சரிக்கை!

May 5, 2026 9:16 am
வாட்ஸ்அப் மூலம் புதிய மோசடி: இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு அவசர எச்சரிக்கை!
இலங்கையர்களை இலக்கு வைத்து, இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாகக் கருதப்படும் புதிய வட்ஸ்அப் (WhatsApp) காணொளி மோசடி (Video Scam) தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு (SL CERT) அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கவர்ச்சிகரமான இளம் பெண்களின் போலி பேஸ்புக் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் தொடர்பு கொள்கின்றனர்.

ஆரம்பத்தில் பேஸ்புக் மூலம் பழகி, பின்னர் வட்ஸ்அப் செயலிக்கு தொடர்பை மாற்றி வட்ஸ்அப் காணொளி அழைப்பினை மேற்கொள்கின்றனர்.

நிர்வாணமான தோற்றத்தில் அழைப்பை ஏற்படுத்தி, பின்னர் அதனைப் படம்பிடித்து அல்லது போலியான ஆபாச காணொளிகளை உருவாக்கி, அதனை பாதிக்கப்பட்டவரின் சமூக வலைத்தள தொடர்புகளுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இந்த மோசடி கும்பல், இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மிரட்டி பணம் கோருகிறது.

சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சமூகத்தில் பல முக்கிய பிரமுகர்கள் கூட இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் நடந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், சைபர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now