New Updates! Fresh news just arrived.

நிந்தவூர் பிரதேச சபையின் புதுநகர் வட்டாரத்திற்கு புதிய உற...

News

நிந்தவூர் பிரதேச சபையின் புதுநகர் வட்டாரத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்!

May 16, 2026 4:25 pm
நிந்தவூர் பிரதேச சபையின் புதுநகர் வட்டாரத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்!
நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆம் வட்டாரமான புதுநகர் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2488/10 இன் பிரகாரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் முகமது முஸ்தபா முகமது அன்சார் அவர்கள் தனது உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல்கள் ஒழுங்கு விதி சட்டத்தின் 66A(1)(a) பிரிவின் கீழ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், குழந்தை மறைக்கார் முகமது ஜெரீஸ் அவர்கள் நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆம் வட்டார உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமன அறிவிப்பை நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அதிகாரியான கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தால் 2026 மே 11ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ்வறிவிப்பு, 2026 மே 12ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now