New Updates! Fresh news just arrived.

சைபர் குற்றங்களினை தடுப்பதற்கு புதிய பொலிஸ் பிரிவு: அமைச...

News

சைபர் குற்றங்களினை தடுப்பதற்கு புதிய பொலிஸ் பிரிவு: அமைச்சர் ஆனந்த விஜேபால!

February 7, 2026 8:12 pm
சைபர் குற்றங்களினை தடுப்பதற்கு புதிய பொலிஸ் பிரிவு:  அமைச்சர் ஆனந்த விஜேபால!
கணினி சார்ந்த குற்றங்களினை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றினை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்திருப்பதாக நேற்று (06) பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது அதிகரித்து வருகின்ற குற்றங்களின் தன்மை தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், நாளொன்றுக்கு 23 தொடக்கம் 25 வரையான சைபர் குற்றங்கள் பதிவாகுவதாகவும், இது கணிசமான அளவு உயர்வு எனவுன்றும் சுட்டிக்காட்டினார்.

குறித்த குற்றங்களினை வினைத்திறனுடன் விசாரணை செய்து தீர்ப்பதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், விசேட அறிவு மற்றும் பொலிஸ் திணைக்களத்தினை நவீனமயமாக்கும் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பொலிஸ் சேவையினை மிகவும் சிறந்த, வினைத்திறனான மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே அரசாங்கத்தினுடைய பிரதான நோக்கம் எனவும், அதற்காகத் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அத்தோடு, திறமையான அதிகாரிகள் உயர்மட்டத்திற்குச் செல்வதற்கான சூழலினை உருவாக்குவதற்கும், தவறிழைக்கும் அதிகாரிகளினை பொலிஸ் சேவையில் இருந்து நீக்குவதற்குமான பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now