New Updates! Fresh news just arrived.

வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பில் புதிய கட்டுப்பாடு - குவைத...

News

வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பில் புதிய கட்டுப்பாடு - குவைத் வெளியிட்ட முக்கிய தீர்மானம்!

June 10, 2026 12:30 pm
வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பில் புதிய கட்டுப்பாடு - குவைத் வெளியிட்ட முக்கிய தீர்மானம்!
குவைத்தின் வீட்டுப் பணியாளர் துறையை ஒழுங்குபடுத்தவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும் நோக்கமாக கொண்டு, வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பு தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை உள்ளிட்ட 10 அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேலும் 27 நாடுகளிலிருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் மனிதவள பொது அதிகாரசபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், வியட்நாம், எத்தியோப்பியா, எரித்திரியா, பெனின், தென்னாப்பிரிக்கா மற்றும் செனகல் ஆகிய நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now