New Updates! Fresh news just arrived.

சிறுபோக அறுவடைக்கு புதிய பலம்: நெல் சந்தைப்படுத்தல் சபைக்...

News

சிறுபோக அறுவடைக்கு புதிய பலம்: நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலும் நிதி!

September 15, 2026 3:53 pm
சிறுபோக அறுவடைக்கு புதிய பலம்: நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலும் நிதி!
2026 சிறு போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலும் 2,500 மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

2026 சிறு போக நெல் கொள்முதல் அவசரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள 7,500 மில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீட்டில் இருந்து இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

மீளச்செலுத்தும் அடிப்படையில் குறித்த 2,500 மில்லியன் ரூபாய் நிதியை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறு போக நெல் கொள்முதல் திட்டத்திற்காக இதுவரை விவசாய அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 6,000 மில்லியன் ரூபாய் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதியைப் பயன்படுத்தி தற்போது நெல் கொள்முதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், மகாவலி B, C மற்றும் H மண்டலங்களிலும் நெல் அறுவடை இன்னும் நிறைவடையவில்லை. இதன் காரணமாக, அப்பகுதிகளில் இனிவரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள நெல் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு தற்போது ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, விவசாயிகளிடம் இருந்து சிறு போக நெல் அறுவடையைத் தடையின்றி கொள்முதல் செய்யும் பணிகளைத் தொடர்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலும் 2,500 மில்லியன் ரூபாயை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now