சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதி...
News
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சிவானந்தன் நிதர்சனம் இன்று (23) தனது பதவியினை உத்தியோகபூர்வமாக கடமையுற்றுள்ளார்.
அவர் ஆரம்பத்தில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையினை எழுதி, தனது பணிகளினை உத்தியோகபூராவமாக பொறுப்பேற்றார். அத்தோடு, சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்கள் வழங்கி அவரை கௌரவித்தனர்.
பு.கஜிந்தன்