New Updates! Fresh news just arrived.

நீதிமன்றம் நோக்கிச் சென்ற நபர் மீது வாள்வெட்டு தாக்குதல்:...

News

நீதிமன்றம் நோக்கிச் சென்ற நபர் மீது வாள்வெட்டு தாக்குதல்: பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

November 19, 2026 5:40 pm
நீதிமன்றம் நோக்கிச் சென்ற நபர் மீது வாள்வெட்டு தாக்குதல்: பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தவணைக்காக முன்னிலையாவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே அவர் மீது இனந்தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது -

புங்குடுதீவில் இடம்பெற்ற சட்டவிரோத மாடுகடத்தல் சம்பவம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பேருந்து உரிமையாளர் அகிலன் கொலை தொடர்பில் கொலையாளிகளை அடையாளம் காட்டியமை சார்ந்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

இவ்வழக்கில் முன்னிலையாவதற்காக குணாளன் ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, மூவர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதன்போது அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், மூன்று விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now