New Updates! Fresh news just arrived.

நீர்கொழும்பு விபத்து: கொள்கலன் லொறிக்கு தீவைத்த மூவர் கைத...

News

நீர்கொழும்பு விபத்து: கொள்கலன் லொறிக்கு தீவைத்த மூவர் கைது!

July 31, 2026 2:20 pm
நீர்கொழும்பு விபத்து: கொள்கலன் லொறிக்கு தீவைத்த மூவர் கைது!
நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் குறித்த விபத்தில் உயிரிழந்ததினைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதம் விளைவித்தமைதொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்டவர்கள் 20, 25 மற்றும் 26 ஆகிய வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளினை சேர்ந்தவர்களாவர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸ் காவிலில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியின் 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்டைக்கு இடைப்பட்ட போலவலாட்ட பகுதியில் வீதியினை கடக்க முற்பட்ட கொள்கலன் லொறியோடு, நீர்கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரு ஓட்டுநர்களும் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன பகுதியினை சேர்ந்த இருவராவர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்திலுள்ள CCTV காணொளிகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், கொள்கலன் லொறிக்குச் சேதம் விளைவித்ததில் தொடர்புடைய அனைத்துச் சந்தேகநபர்களினையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now