நில்வள கங்கை தாழ்நிலப் பகுதியில் வௌ்ளம் ஏற்படும் அபாயம்: ...
News
நில்வள கங்கை தாழ்நிலப் பகுதியில் வௌ்ளம் ஏற்படும் அபாயம்: நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
நில்வள கங்கையினுடைய தாழ்நிலப் பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு நிலைமையானது ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, அக்குரெஸ்ஸ, அத்துரலிய மற்றும் மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹகொட மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட நில்வள கங்கையினுடைய தாழ்நிலப் பகுதிகளில் குறித்த அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நில்வள கங்கையினுடைய மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சியானது பதிவாகியுள்ளமை மற்றும் நதி நீர்மானிகளினுடைய நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் குறித்த எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதிகளின் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் இது தொடர்பில் அவதானத்தோடு, இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களமானது கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவானது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை அறிவித்தலானது நாளை (16) மாலை 6.00 மணி வரைக்கும் செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.