சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்த...
News
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!
எதிர்க்கட்சிகளினாலல் சமர்ப்பிக்கப்படவுள்ள திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான விவாதத்தினை எதிர்வருகின்ற நவம்பர் மாதம் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகவும் ஜனநாயகத்துக்கு முரணாகவும் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியும், அவர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் எனக் கூறியும் எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம் கையளிக்கப்பட்டது.
சபாநாயகருக்கு எதிரான 50 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, நாடாளுமன்றம் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், அந்த வாரத்துக்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுக்கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, நவம்பர் 3ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், நவம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இலக்கம் 2508/27 உடைய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் மற்றும் மேலதிக மதிப்பீடு என்பன ஒப்புதலுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், நவம்பர் 5ஆம் திகதி வியாழக்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணைகளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.