New Updates! Fresh news just arrived.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற...

News

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

October 30, 2026 5:43 pm
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 3ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகத் திருத்தி, ஒக்டோபர் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்காததால், எதிர்வரும் நவம்பர் 03ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என அமைச்சர் கூறினார்.

அதன்படி, எதிர்வரும் 3ஆம் திகதியானது பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அமைச்சர், நிலையியல் கட்டளைகளுக்கு அமைய வழங்கப்பட்டால், அதனை வரவு செலவுத் திட்டக் காலத்திற்கு முன்னர் விவாதிக்க முடியும் என பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் அறிவிக்கப்பட்டதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

"எதிர்க்கட்சியினரால் சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை மீறாத வகையில், நிலையியல் கட்டளைகளுக்கு இணங்க, பாராளுமன்றத்தில் இதுவரை சபாநாயகர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு நிலையியல் கட்டளைகளுக்குப் பொருத்தமான வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அங்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம், இந்த மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் எதிர்க்கட்சியினர் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிலையியல் கட்டளைகளுக்கு அமைய திருத்தித் தருமாறு. ஆனால் அது எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து நிலையியல் கட்டளைகளுக்கு அமைய திருத்தப்பட்டு வழங்கப்படாததால், பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. பாராளுமன்றம் தொழிற்பட வேண்டியது அதுவே நிறைவேற்றியுள்ள நிலையியல் கட்டளைகளுக்கு அமையவே ஆகும். பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவி என்பது பாராளுமன்றத்தின் தலைவராகும். அதனால் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாக ஜனாதிபதி, பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சபாநாயகர் போன்ற முக்கிய பதவிகளில் உள்ள நபர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எந்த முறையில் சமர்ப்பிக்க முடியும் என்பது தொடர்பில் பாராளுமன்ற நிலையியல் கட்டளை 83இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் நீதிமன்றத்தில் உள்ள விடயங்கள் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைத் திட்டமிட்டுத் தயாரிப்பது தொடர்பில் 91ஆம் நிலையியல் கட்டளையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கே இது தொடர்பில் தீர்மானம் எடுத்து பாராளுமன்ற நிகழ்ச்சிநிரலில் சேர்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து அது சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், நவம்பர் 3ஆம் திகதிக்கான பாராளுமன்ற நாள் முழுமையாக ஒத்திவைப்பு விவாதத்திற்காக மாற்றப்பட்டுள்ளது" என்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now