New Updates! Fresh news just arrived.

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம்; திகதி குறிப்பிடப்படாமல...

News

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம்; திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

October 16, 2026 2:06 pm
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம்; திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்களை தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு இன்று (16) பாராளுமன்ற வளாகத்தில் கூடியது.

குறித்த விவாதத்தை எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்வதற்கு ஆளும் கட்சி யோசனை முன்வைத்த போதிலும், சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் 50 குற்றச்சாட்டுகள் உள்ளடங்கியுள்ளதால் அதற்கு ஒரு நாள் போதுமானதாக இருக்காது என எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இருப்பினும், சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள கருத்துகளில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காணப்படுவதால், அது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என ஆளும் கட்சி இதன்போது தெரிவித்தது.

இதற்கமைய, அதற்குச் சிறிது காலம் எடுக்கும் என்பதால் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னரே சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now