எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம் -...
News
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினுடைய பணிப்பாளர்ரான மயூரு நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் அவசர எரிபொருள் தேவை ஏற்படுமானால் அதனைப் பெற்றுக்கொள்வது குறித்து இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளோடு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவை மிகவும் வெற்றிகரமாக அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (15) காலை 6:00 மணி தொடக்கம் QR குறியீட்டு முறைக்கு அமைவாக எரிபொருள் விநியோகமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னர் QR குறியீட்டைப் பெற்ற, அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தினை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பழைய QR குறியீடு இருப்பின் அதையே பயன்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிதாக QR குறியீட்டினைப் பெற வேண்டியவர்கள் https://fuelpass.gov.lk/ என்னும் இணையதளத்தின் ஊடாக அதனைப் பதிவிறக்கம் செய்யலாம்.
வாகன உரிமையாளர் மாற்றம், தொலைபேசி இலக்க மாற்றம் அல்லது புதிய பதிவுகளுக்காக அந்த இணையதளத்திலுள்ள 'Vehicle Registration' பகுதியில் இன்னும் ஒரு மணித்தியாலத்திற்குள் புதுப்பிக்கப்படும் (Update) எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினத்தில் இருந்து QR குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த பணிப்பாளர் மேலும் யஜரிவிக்கையில்:
"கடந்த சில நாட்களாகப் பலரும் எரிபொருளைச் சேமித்து வைப்பதினையும், ஊடகச் சந்திப்புகள் ஊடாக எரிபொருள் வரிசைகளைளினை உருவாக்குவதினையும் அவதானித்தோம். இதனால் ஒரு அபாயகரமான நிலை ஏற்படலாம் என்பதினால் தான் QR முறையினை மீண்டும் கொண்டுவந்தோம். மற்றபடி எரிபொருளுக்குப் பிரச்சினை இல்லை. எவரும் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்" எனவும் தெரிவித்தார்.