New Updates! Fresh news just arrived.

எவருக்கும் பெரும்பான்மை இல்லை - தேர்தலுக்கு பிந்தைய கருத்...

News

எவருக்கும் பெரும்பான்மை இல்லை - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

October 28, 2026 10:16 am
எவருக்கும் பெரும்பான்மை இல்லை - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
இஸ்ரேலில் நடைபெற்று முடிந்த முக்கியமான பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls), எந்தவொரு தரப்பிற்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன.

நீண்டகாலப் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தலைமையிலான கூட்டணியோ அல்லது முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியோ ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை.

120 ஆசனங்களை கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் (Knesset), காடி ஐசன்கோட்டின் 'யாஷார்' (Yashar) கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'மாற்றத்திற்கான கூட்டணி' (Change Bloc) 51 ஆசனங்களையும், பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' (Likud) கட்சி தலைமையிலான தீவிர வலதுசாரி மற்றும் தீவிர மரபுவழி யூதக் கூட்டணிகள் 51 ஆசனங்களையும் பெறக்கூடும் என இரண்டு முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு கருத்துக்கணிப்பு நெதன்யாகுவின் கூட்டணி 3 இடங்கள் முன்னிலையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.

அதேவேளை, சாதனையாக 18 அல்லது 19 ஆசனங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் இரண்டு அரபுப் கட்சிகளே (United Arab List & Joint List) புதிய ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு குறிப்பிடத்தக்க வகையில் 77.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது 1999ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவாகும். இராணுவப் பணியாளர்களின் சுமார் 600,000 வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு வியாழக்கிழமையன்றே இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இஸ்ரேலிய ஜனாதிபதி அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி, கூட்டணி அரசாங்கத்தை அமைக்க அதிக வாய்ப்புள்ள தலைவரை அழைப்பார்.

இந்தச் செயல்முறை நிறைவடைய பல வாரங்கள் ஆகலாம். ஒருவேளை ஆட்சியைமைப்பதில் தோல்வி ஏற்பட்டால் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து காசா, லெபனான், ஈரான் ஆகிய பிராந்தியங்களில் ஏற்பட்ட போர்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் இதுவென்பதால், இஸ்ரேலின் எதிர்கால அரசியல் பாதையைத் தீர்மானிக்கும் மிக முக்கியத் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now