New Updates! Fresh news just arrived.

பயங்கரவாத தடை சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அர...

News

பயங்கரவாத தடை சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுக்காக்கும் சட்டமும் வேண்டாம்: பருத்தித்துறை நகசபையில் தீர்மானம்!

February 25, 2026 9:10 pm
பயங்கரவாத தடை சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுக்காக்கும்  சட்டமும் வேண்டாம்: பருத்தித்துறை நகசபையில் தீர்மானம்!
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க கோரியும் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட விருக்கின்ற பயங்கர வாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சடடத்தினையும் கொண்டுவர வேண்டாம் என இன்று (25) பருத்தித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் இரண்டு நிமிட அகவணக்கத்தோடு, ஆரம்பமான நிலையில் தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் அவர்களினால் கொண்டுவரப்பட்ட குறித்த தீர்மானம் 12 உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இதில் தேசிய மக்கள் சக்தியினுடைய உறுப்பினர்கள் 2 பேரும் குறித்த தீர்மானத்தில் இருந்து விலகியிருந்தனார்.

மொத்தம் 15 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, இன்றைய அமர்வில் முதலவதாக சென்ற கூட்டத்தின் அறிக்கை வாசிக்கப்ட்டு அதனை திருத்தங்களோடு சபை அங்கீகரித்தது.

தொடர்ந்து குடத்தனை வலிக்கண்டி, பருத்தித்துறை முனை நடராசா அரங்கு உட்பட்ட பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணிகளை நில அளவீடு செய்து எல்லைப்படுத்துவது என்றும், சபை நடவடிக்கைக்கான நிதி அனுமதிகள், மலக் கழிவு உறிஞ்சுவதற்க்குரிய வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்வது என்றும், வாழைத்தண்டு உட்பட்ட கழிவுகளை துகளாக்கும் இயந்திர கொள்வனவு, உட்பட. பல்வேறு தீர்மாநாங்கள் இன்றையதினம் நிறைவேற்றப்பட்டுள்ளன

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now