New Updates! Fresh news just arrived.

IMF திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானம் இல்ல...

News

IMF திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானம் இல்லை

September 29, 2026 10:39 pm
IMF திட்டத்தில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானம் இல்லை
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இதுவரையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவது தொடர்பில் எவ்விதமான உறுதியான தீர்மானதங்களையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இன்று 29 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சில கணிப்புகள் வெற்றியளித்துள்ள போதிலும், மேலும் சில கணிப்புகளுக்கான இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் உலகின் தற்போதைய சூழ்நிலைகள் அத்தோடு பொருளாதார நிலைமைகள் ஆகிய அனைத்தையும் கருத்திறல் கொண்டே தேவையான தருணத்தில் தீர்மானம் எடுக்க முடியும் என்று அமைச்சர் இங்கு மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், எதிர்வரும் 2027ஆம் வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திலிருந்து இலங்கை விலகவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து விலகி மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்கவே எதிர்பார்ப்பதாகக்ஷபிரதி அமைச்சர் அங்கு கூறியிருந்தார்.

எனினும், இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இது தொடர்பில் வினவப்பட்ட போது, அதற்கான நிலையான தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என கூறினார்.

அவ்வாறு நிலையான தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை, சில கணிப்புகளை நாமே வெற்றியடையச் செய்துள்ளோம்.

ஆனால் சில கணிப்புகளுக்கான இலக்குகளை நாம் இன்னும் எட்டவில்லை, அவை இடைப்பட்ட நிலையிலேயே உள்ளன.

இன்னும் இவ்வாண்டில் சில மாதங்களே உள்ளன, அத்தோடு அடுத்த ஆண்டிலும் சில மாதங்கள் உள்ளன. ஆதலாலு உலகின் நிலைமை அத்தோடு பொருளாதாரத்தின் நிலைமை ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டே அந்தத் தருணத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் என மேலும் அவர் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now