பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளுக்கு QR குறியீடு வழங்கப்படாம...
News
பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளுக்கு QR குறியீடு வழங்கப்படாமை பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது: இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்
பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளுக்கு, கியூஆர் குறியீடுகள் மூலம் எரிபொருள் வழங்கும் முறை வழங்கப்படாமையானது பேக்கரி உரிமையாளர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.
பேக்கரி துறையில் உள்ள பெரும்பாலான சூளைகள் டீசலில் இயக்கப்படுகின்றன என்றும், மற்ற துறைகளில் உள்ள பல்வேறு தரப்பினருக்கு எரிபொருள் வழங்குவதற்கான ஒரு முறையை அரசாங்கம் தயாரித்திருந்தபோதிலும், பேக்கரி உரிமையாளர்களின் மீது அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்பது வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் அரசாங்கம் இதற்கு ஒரு சரியான தீர்வை வழங்காவிட்டால், மக்களும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றும், பேக்கரி பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.