New Updates! Fresh news just arrived.

வடமராட்சி தனியார் பஸ் சேவை சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு ...

News

வடமராட்சி தனியார் பஸ் சேவை சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு செவி சாய்க்காத வடமாகான வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை!

March 19, 2026 9:46 pm
வடமராட்சி தனியார் பஸ் சேவை சங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு செவி சாய்க்காத வடமாகான வீதி பயணிகள்  போக்குவரத்து அதிகார சபை!
வடமராட்சி தனியார் பஸ் சேவைச் சங்கம் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றினை இன்று அனுப்பி வைத்துள்ளது.

வடமராட்சி தனியார் பஸ் சேவை சங்கத்தின் விதிமுறைகளை மீறிய சிற்றூர்தி நடத்துனர் மற்றும் சாரதி ஒருவரையும் ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக சங்கத்தால் இடை நிறுத்த பட்டிருந்ததாகவும், அதே வேளை சங்க கட்டுப்பாட்டு அறிக்கையில் பதிவிடாத சிற் ஊர்தி ஒன்றில் பயணிகளை ஏற்றி செல்ல வடமராட்சியில் அமைந்துள்ள வட மாகாண வீதி பயணிகள் போக்கு வரத்து அதிகாரசபை அலுவலர் மற்றும் நேர கனிப்பாளர் ஆகியோர் அனுமதி வழங்கியதாகவும் இது தமது சங்க நடவடிக்கைகளை அவ மதிக்கும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ள வடமராட்சி தனியார் பஸ் சேவை சங்கம் உரிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டதுடன் இதனால் தமது சங்கத்தின் நேர கனிப்பாளர் அலுவலகத்தை மூடியுள்ளதாக்கவும் அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடபட்டுள்ளது.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now