கல்வி அமைச்சின் அறிவிப்பை மீறிய வடமாகாண கல்வித் திணைக்களம...
News
கல்வி அமைச்சின் அறிவிப்பை மீறிய வடமாகாண கல்வித் திணைக்களம்!
மத்திய கல்வி அமைச்சு முதலாம் தவணைக்கான பரீட்சைகளை இரத்துச்செய்துள்ள போதிலும் வடமாகாண கல்வி அமைச்சு இவ்வறிவுறுத்தலை பின்தள்ளி பரீட்சைகளை நடாத்த முனைப்புடன் செயற்ப்படுவது பதிப்பகங்களில் பெறப்படும் சலுகை கொடுப்பனவுக்கா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
கல்வி அமைச்சின் சுற்று நிருபம் ED/17/03/01/01/01 திகதி 2026.01.02 இன் பந்தி 4.7 இல் குறிப்பிட்டதற்க்கு அமைவாக தரம் 7-11 வரையும் புதிய தரம் 6 இற்கும் பரீட்சைகள் நடாத்தப்பட கூடாது.
இருப்பினும் வடமாகாண கல்வி அமைச்சு முதலாம் தவணை விஞ்ஞான பாட செயன்முறைப்பரீட்சை (கடித இல. NP/20/ED/Sc/Gen திகதி 12.02.2026) ஊடாகவும் தவனை பரீட்சை தொடர்பாக வெறுமனே கையொப்பம் இடப்பட்ட நேரசூசி ஊடாகவும் பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளது.
ஏற்கனவே கல்வி அமைச்சின் முதலாம் தவனையில் விளையாட்டுப் போட்டிகள் காரணமாக பரீட்சைகள் இடைநிறுத்தப்படும் என்கின்ற சுற்று நிருபம், மேற்குறிப்பிட்ட இந்த வருடத்திற்கான புதிய சுற்று நிருபம் என அனைத்தையும் புறம்தள்ளி மத்திய அதிகாரத்தை புறம் தள்ளி மாகாண கல்வித் திணைக்களம் செயற்ப்படுவது மாணவர்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் செயற்ப்பாடாக அமையக்கூடும்.
பு.கஜிந்தன்