New Updates! Fresh news just arrived.

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்!

News

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்!

April 23, 2026 1:08 pm
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்!
தேர்தலில் வாக்களிக்காமலிருப்பதானது ஜனநாயக துரோகமாகும் என நாம் தமிழர் கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில் சென்னை - நீலாங்கரையில் தனது வாக்கை செலுத்திய சீமான் தொடர்ந்து செய்தியாளர்களினை சந்தித்த அவர் தெரிவிக்கையில்:

“தேர்தலில் வாக்கு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்சினை என்னும் ஒரு கேள்வியானது உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லையா அல்லது இந்த நாட்டினுடைய ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை இல்லையா என்கின்ற கேள்வி எழுகின்றது. நூறு சதவீத வாக்கானது பதிவாக வேண்டும் என்று தேர்தல் ஆணையகம் சொல்லி வருகின்றது.

குண்டு வைப்பது, கொலை செய்வது மற்றும் சொத்து சேர்த்து கணக்கு காட்டாமலிருப்பது மட்டும் குற்றம் அல்ல.தமது வாக்கினை செலுத்தாமலிருப்பதுவும் குற்றம்தான். அது ஜனநாயக துரோகம் தான். கற்றவர்கள் தான் மற்றவர்களுக்கு இது தொடர்பில் வழிகாட்ட வேண்டும்.

ஒரு வாக்கு செலுத்துவதில் என்ன மாற்றம் என்று நினைக்கின்றார்கள். ஒவ்வொரு வாக்கிலும் இருந்துதான் அந்த மாற்றமானது வரும். நாம் எல்லோரும் வாக்கு செலுத்துவது நமது பொறுப்பு,தமது கடமை. அதை தவறாமல் செய்ய வேண்டும் என்று அன்பாக வேண்டுகின்றேன்” என தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now