மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு! - Gu...
News
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!
தற்காலிக அனுமதிப்பத்திரங்களினை வைத்திருந்த 4 இலட்சம் பேருக்கு இதுவரைக்கும் நிரந்தர அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினுடைய ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த காலங்களில் நிலவிவந்த சாரதி அனுமதிப்பத்திர அட்டை தட்டுப்பாட்டின் காரணமாக, சாரதிகளுக்கான பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டன.
தற்போது அந்த நடைமுறையின் கீழ் தற்காலிக அனுமதிப்பத்திரங்களினை பெற்றவர்களுக்காக நிரந்தர அட்டைகளினை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 4 இலட்சம் பேருக்கு நிரந்தர அட்டைகளானது வழங்கப்பட்டுள்ள நிலையில்,அதற்கு மேலதிகமாக ஒரு இலட்சம் அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராகவுள்ளதாகவும் அவற்றை எதிர்வருகின்ற நாட்களில் தற்காலிக அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினுடைய ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக மேலதிகமாக இன்னும் 10 இலட்சம் அட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
இந்த அட்டைகளினை விரைவில் இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.