New Updates! Fresh news just arrived.

முச்சக்கர வண்டி கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப...

News

முச்சக்கர வண்டி கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

June 30, 2026 3:02 pm
முச்சக்கர வண்டி கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது எனத் தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு கிலோமீட்டருக்கு 16 ரூபாய் நட்டத்துடனேயே தமது தொழிலை முன்னெடுத்து வருவதாக அந்தச் சங்கத்தின் பிரதம செயலாளர் லலித் ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (29) நள்ளிரவு 12.00 மணி முதல் நாடு முழுவதும் சிப்பெட்கோ எரிபொருள் வகைகளின் சில்லறை விலைகளை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தம் நாளை (01) முதல் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now