New Updates! Fresh news just arrived.

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படும் தினம் அறிவிப்ப...

News

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படும் தினம் அறிவிப்பு!

October 6, 2026 12:52 pm
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்படும் தினம் அறிவிப்பு!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு, அடுத்து வரும் முதலாவது பாராளுமன்ற வாரத்திலேயே அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறும் யோசனை முன்வைப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமாகிய பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அஜித் பி. பெரேரா இன்று (06) அறிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சரான பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்படவுள்ள குறித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் கையெழுத்திடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now