New Updates! Fresh news just arrived.

எரிபொருள் வழங்குவதற்காக விதிக்கப்பட்ட QR முறை தொடர்பில் அ...

News

எரிபொருள் வழங்குவதற்காக விதிக்கப்பட்ட QR முறை தொடர்பில் அறிவிப்பு!

July 17, 2026 11:56 am
எரிபொருள் வழங்குவதற்காக விதிக்கப்பட்ட QR முறை தொடர்பில் அறிவிப்பு!
எரிபொருள் வழங்குவதற்காக விதிக்கப்பட்ட QR முறையை நீக்கும் திட்டம் தற்போது இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையின்மை காரணமாக குறித்த நடவடிக்கை மேலும் செயற்படடுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

QR முறையின் பயன்பாடு எரிபொருள் மற்றும் டொலர் கையிருப்பு இரண்டையும் கட்டுப்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய அவர், போர்ச் சூழல் மீண்டும் மோசமடைந்தால் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையைத் தடுக்கவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும் QR முறையைத் தொடர்ந்து பயன்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

போர்ச் சூழல் மீண்டும் உருவானதால் நாட்டின் எரிபொருள் விநியோக வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், எரிபொருள் விலையில் மீண்டும் உயர்வு ஏற்படுமா என்பதை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now