New Updates! Fresh news just arrived.

நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

News

நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

May 19, 2026 3:59 pm
நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலப்பகுதிக்குள் தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித திருத்தங்களுமின்றி அவ்வாறே பேணிச் செல்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நீர் கட்டண சூத்திரத்திற்கு அமைய, பிரதான செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, நீர் விற்பனைக்கான அலகுச் செலவு அரையாண்டுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

2025 ஆம் ஆண்டுக்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி அறிக்கைக்கமைய மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படி, தற்போதைய நீர் கட்டணத்தின் மூலம் முழுமையான செயல்பாட்டுச் செலவுகளை ஈடுசெய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, 2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்குள் நீர் விற்பனைக்கான அலகுச் செலவை அதிகரிக்காமல் அதே மட்டத்தில் பேணிச் செல்வதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலப்பகுதியில் தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்தும் பேணிச் செல்வதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவையின் உடன்பாடு வழங்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now