நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்!
News

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காத்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, அனர்த்த அபாயம் அதிகமாகக் காணப்படும் மாவட்டங்களிலும் அவற்றை அண்மித்த பகுதிகளிலும் வசிக்கும் இலங்கையர்கள், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசர உதவி அல்லது தூதரக ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள், காத்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கம் +9779851048653 அல்லது Slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்.
எனினும், நேபாளத்தில் நிலவும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை எந்தவொரு இலங்கைப் பிரஜையும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.