நுவரெலியா கிரிகோரி ஏரியின் வான் கதவுகள் திறப்பு!
News

நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், ஏரியின் வான் கதவுகள் இன்று (04) பிற்பகல் திறக்கப்பட்டதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா பகுதியில் நிலவும் கடும் சீரற்ற காலநிலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக கிரிகோரி ஏரியில் படகு சவாரி செய்வதை நுவரெலியா மாநகர சபை தற்காலிகமாக தடை செய்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா - பதுளை பிரதான வீதி, நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் தொப்பஸ் முதல் லபுகலை வரையிலான பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால், அந்த வீதிகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டுநர்கள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.