New Updates! Fresh news just arrived.

சீரற்ற காலநிலைக்கு பின் புத்துயிர் பெறும் நுவரெலியா! - Gu...

News

சீரற்ற காலநிலைக்கு பின் புத்துயிர் பெறும் நுவரெலியா!

September 27, 2026 3:25 pm
சீரற்ற காலநிலைக்கு பின் புத்துயிர் பெறும் நுவரெலியா!
நுவரெலியாவில் சீரற்ற காலநிலைக்கு பின்னர் தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால் ஓரளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆரம்பமாகியுள்ளது

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.

நுவரெலியாவில் ஏற்பட்டிருந்த மழை பின்னர் முக்கிய சுற்றுலா பகுதியினை சுற்றி பல புதுப்பித்தல் பணிகளானது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் பல்வேறு பன்முக பண்புகளினை கொண்ட கிரகறி வாவியில் நாட்டில் நிலவிய மோசமான காலநிலைமையினால் படகு சவாரி முற்றாக நிறுத்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டிருந்தது.

நுவரெலியாவில் தொடர்ந்து பெய்த கன மழையினால் சேதம் அடைந்தன. இதனை அடுத்து குறித்த படகுகள் அனைத்தும் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் படகு சவாரிக்கு வரும் சுற்றுலா பயணிகளினால் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.

குறிப்பாக இன்று நுவரெலியாவில் வெயில், சாரல் மழை மற்றும் பனிப்பொழிவு ஆகிய காலநிலை நிலவி வருகின்றது. குறித்த மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளினை வெகுவாக கவர்ந்துள்ளது.

வி தீபன்ராஜ்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now