New Updates! Fresh news just arrived.

நீர் வழங்கல் சபையின் 23 வேலை மேற்பார்வையாளர்களுக்கு NVQ ச...

News

நீர் வழங்கல் சபையின் 23 வேலை மேற்பார்வையாளர்களுக்கு NVQ சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

October 29, 2026 8:48 am
நீர் வழங்கல் சபையின் 23 வேலை மேற்பார்வையாளர்களுக்கு NVQ சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் தற்போது பணி மேற்பார்வையாளர்களாகக் கடமையாற்றும் 23 பேரின் தொழிற்துறைத் திறன்களை உத்தியோகபூர்வமாக மதிப்பீடு செய்து, அவர்களுக்கான 'Construction Site Supervisor NVQ' சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு நேற்று (28) இடம்பெற்றது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொது முகாமையாளர், மேலதிக பொது முகாமையாளர் (மனிதவள மேலாண்மை) மற்றும் சிரேஷ்ட பொறியியலாளர் ஆகியோரின் முன்னிலையில் இச்சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டன

இத்திட்டத்தின் கீழ், சபையில் தற்போது வேலை மேற்பார்வையாளர்களாகச் சேவையாற்றும் உத்தியோகத்தர்களின் தொழில்முறைத் திறன்கள் முறைப்படி அடையாளங்காணப்பட்டு, தேவையான திறன் இடைவெளிகளைப் பூர்த்தி செய்வதற்காக மனிதவள மேம்பாடு மற்றும் பயிற்சிப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் ஐந்து நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிநெறி நடாத்தப்பட்டது. முந்தைய கற்றல்களை அங்கீகரித்தல்' (Recognition of Prior Learning – RPL) அணுகுமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் வழியே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொழில்சார் அறிவு, அனுபவம் மற்றும் செய்முறைத் திறன்கள் விரிவாக மதிப்பிடப்பட்டு NVQ சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now