New Updates! Fresh news just arrived.

ஆசிரியர் சேவை வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளுக்கு சலு...

News

ஆசிரியர் சேவை வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளுக்கு சலுகை!

September 12, 2026 9:13 am
ஆசிரியர் சேவை வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளுக்கு சலுகை!
இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்த சலுகை கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 2022 ஒக்டோபர் 23 முதல் 2025 ஜூன் 30 வரை ஆசிரியர் சேவையின் தரம் I-க்கு பதவி உயர்வு பெற்றவர்கள், தற்போதைய தரமுயர்வுக்காக குறித்த பரீட்சையை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனினும், அடுத்த தரமுயர்வுக்கு முன்னர் தேவையான தடைத்தாண்டலை நிறைவு செய்ய வேண்டும்.

மேலும், 2025 ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தரமுயர்வு பெறும் ஆசிரியர்களுக்கும், தொகுதிகள் அல்லது தடைத்தாண்டல் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளார்களா என்பதை கருத்திற்கொள்ளாமல் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகள் முறையே 2494, 2498 மற்றும் 2503ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைய நடத்தப்படவுள்ளன.

இதுதொடர்பான மேலதிக விளக்கங்களுடன் கல்விச் சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now