பாராளுமன்ற திறன் விருத்தி முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கத்...
News
பாராளுமன்ற திறன் விருத்தி முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுரகத்தின் அதிகாரிகள் சபாநாயகருடன் கலந்துரையாடல்!
ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் கீழ் இலங்கை பாராளுமன்றத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பயிற்சித் திட்டங்கள் குறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
பாராளுமன்றத்தின் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட தொடர் பயிற்சித் திட்டங்கள் மற்றும் திறன் விருத்தி முயற்சிகள் குறித்து கௌரவ சபாநாயகருக்கு விளக்கமளிப்பது மற்றும் அவரின் ஒப்புதலைப் பெறுவது இச்சந்திப்பின் நோக்கமாக அமைந்தது. ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் அதிகாரிகள் குழுவினர் 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்தும் இங்கு நினைவுகூறப்பட்டது.
இக்குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், மேற்பார்வை மற்றும் பொது நிதி தொடர்பில் பாராளுமன்றத்திற்குக் காணப்படும் பொறுப்புக்களை சிறப்பாக மேற்கொள்வதற்கான திறனை மேம்படுத்துவதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்தச் சந்திப்புக்களின் அடிப்படையில் இலங்கைப் பாராளுமன்றத்திற்குப் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நிபுணர்கள் தலைமையிலான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க அரசியல் பொருளாதார கென்சியூலர் அந்தோனி பிர்னோட், வரவுசெலவுத் திட்டம் மற்றும் நிதிக் கண்காணிப்பு தொடர்பான விடயங்கள், அரசாங்க நிதி பற்றிய குழு மற்றும் பாராளுமன்ற வரவுசெலவு அலுவலகத்துடன் இணைந்து, பாராளுமன்ற விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க வல்லுநர்களால் செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் மூலம் இதற்கான வசதி செய்து கொடுப்பதன் மூலம், பாராளுமன்ற உறுப்பினர்களின் பரந்த பங்கேற்பை அடைய முடியும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய அமெரிக்காவினுடைய பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை மற்றும் அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றினுடைய தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு சபாநாயகர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களினை வழங்குவதன் ஊடாக தனது ஆதரவையும் அவர் வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றம் சமீபத்தில் எடுத்துள்ள முற்போக்கான நடவடிக்கைகவினைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய ஆகியவற்றினுடைய பரிந்துரைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஊடாக சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளில் திருத்தங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதினையும் எடுத்துக் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் திறனை மேம்படுத்துவதற்கு பாராளுமன்ற கல்வி மையமொன்றை நிறுவுவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். அத்துடன், அமெரிக்கத் தூதுரகத்தின் சார்பில் அரசியல் பொருளாதார கென்சியூலர் அந்தோனி பிர்னோட், அரசியல் அதிகாரி அடம் மைக்கலோ மற்றும் அரசியல் நிபுணர் நஸ்ரின் மரிக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.