New Updates! Fresh news just arrived.

உலக சந்தையில் தொடரும் எண்ணெய் விலை உயர்வு!

News

உலக சந்தையில் தொடரும் எண்ணெய் விலை உயர்வு!

September 11, 2026 8:25 am
உலக சந்தையில் தொடரும் எண்ணெய் விலை உயர்வு!
ஈரான்–அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று (11) காலை பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. கடந்த மே மாதத்துக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச விலையாக இது குறிப்பிடப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்க WTI கச்சா எண்ணெயின் விலை 103.34 டொலராகவும், மேர்பன் ரக எண்ணெயின் விலை 122.48 டொலராகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி பிரெண்ட் எண்ணெய் விலை 100 டொலர் எல்லையை கடந்ததிலிருந்து தொடர்ச்சியான அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now