New Updates! Fresh news just arrived.

சட்டவிரோத சிகரெட், பீடி தொகையுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் ...

News

சட்டவிரோத சிகரெட், பீடி தொகையுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

January 17, 2026 11:13 am
சட்டவிரோத சிகரெட், பீடி தொகையுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்த வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையோடு சந்தேகநபர் ஒருவரினை இன்று (17) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது பொலிஸார் கைப்பற்றிய குறித்த சிகரெட் மற்றும் பீடி தொகையினுடைய பெறுமதி இருபது இலட்சத்து முப்பத்தெட்டாயிரம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவானது தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மத்துகம, வலல்லாவிட்ட பிரதேசத்தினை சேர்ந்த 33 வயதுடைய மோட்டார் வாகன திருத்துநர் எனவும் அவர் இன்று அதிகாலை 12.40 மணியளவில் இந்தியாவினுடைய சென்னை நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். .

இதன்படி, சந்தேகநபர் கொண்டு வந்த நான்கு பயணப் பொதிகளுக்குள் விளையாட்டுப் பொருட்கள், சேலைகள் மற்றும் சட்டைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு இடையில் மறைத்து வைத்து வைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் 12,000 அடங்கிய 60 சிகரெட் கார்ட்டூன்கள் மற்றும் இந்தியத் தயாரிப்பு பீடிகள் 23,800 அடங்கிய 19 பீடி பண்டல்களினையும் கொண்டு வந்துள்ளமை சோதனைகளில் தெரியவந்துள்ளது.

அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபரினை வரும் 21 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now