New Updates! Fresh news just arrived.

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

News

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

May 29, 2026 1:53 pm
மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அரச மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹச் பெருநாளை முன்னிட்டு மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கொள்வனவு செய்த மதுபான போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்குடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக நேற்று (28), சந்தேக நபர் தனது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சான்றுப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now