குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு: 4 பேர் காயம்! - Gur...
News
குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு: 4 பேர் காயம்!
லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண் தொழிலாளர் குழுவினர் கொழுந்து பறித்து கொண்டிருக்கும் போது குளவிகள் கலைந்துவந்து கொட்டியமையினால் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று (21) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச் சேர்ந்த அப்பாவு சுப்பிரமணியம் (வயது 71) என்பவரே குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மேலும் குளவிக் கொட்டுக்கு இலக்கான 4 தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை மலையினுடைய மரமொன்றில் இருந்த குளவிக்கூடு உடைந்ததைத் தொடர்ந்து, அதில் இருந்த குளவிகள் கலைந்துவந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கவினை கொட்டியுள்ளன.
வி.தீபன்ராஜ்