ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
News

அவிசாவளையில் புலத்கோஹுபிட்டிய வீதியின் பொல்கட்டுவங்குவ பகுதிக்கு அருகில் பாயும் ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று 20 ஆம் திகதி காலை பெய்த பலத்த மழை காரணமாக ரிட்டிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்தமையினால், இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.
பிரதேச மக்களும், ருவன்வெல்ல பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அவர் விழுந்த இடத்திற்குச் சற்றுக் கீழேயுள்ள நீர்நிலையொன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்தவர் அம்பாகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு, பிரேதப் பரிசோதனை கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.