New Updates! Fresh news just arrived.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருதில் கட...

News

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருதில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா திறந்து வைப்பு!

February 14, 2026 3:35 am
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருதில் கடற்கரை பொழுதுபோக்கு  பூங்கா திறந்து வைப்பு!
அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா " வேலைத்திட்டத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக நேற்று வெள்ளிக்கிழமை (13) சாய்ந்தமருதில் 1 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவினை பாராளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக்
குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா திறந்து வைத்து மக்கள் பாவனைக்காக இன்று பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கிழக்கு மாகாண கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் எம். துலஷிதாஸன், கல்முனை மாநகர ஆணையாளர் ரீ.எம். றாபி மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தினுடைய உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தியினுடைய தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக மற்றும் இணைப்புச்செயலாளர் உட்பட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now