பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்ப...
News
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பில் திறந்த கலந்துரையாடல்!
பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பிலான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தினுடைய ஒருங்கிணைப்பில், நேற்று (20) தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் அரசியற் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், இளையோர் மற்றும் மகளீர் அமைப்புக்களினுடைய பிரதிநிதிகள் என ஏறத்தாழ 100 பேரளவில் பங்குபற்றி இருந்தனர்.
தொடக்க உரையாற்றிய குறித்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சட்டத்தரணி கலாநிதி.க. குருபரன் (யாழ். பல்கலை சட்டத்துறை முன்னாள் தலைவர்) பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்ததைத் சுட்டிக்காட்டி, மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குகின்ற விடயமானது தேசிய மக்கள் சக்தியின் சிங்கள மொழி மூல தேர்தல் விஞ்ஞானபத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்கின்ற விடயத்தினை ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர் லயனல் போபகேயின் அண்மைய கட்டுரையில் உள்ள விடயத்தினையும் மேற்கோள்காட்டி, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதியதொரு சட்டத்தினைக் கொண்டு வர தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயக்கத்தோடு முன்வந்திருப்பதனை சுட்டிக்காட்டியிருந்தார்.
தமிழர் தரப்பினுடைய நிலைப்பாடு பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டினார். மேலும் தற்போது நிலவும் தண்டனைச் சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைக் கோவை மற்றும் இதர குற்றவியல் சட்டங்களினுடைய ஏற்பாடுகளில் போருக்குப் பின்னரான சமூக நிலைமை கையாளப்படக் கூடியது, அதற்கென தனித்து பயங்கரவாத தடைச்சட்டம் என்னும் பெயரில் ஒரு சட்டம் தேவையில்லை என குறிப்பிட்டார்.
சர்வதேசச் சட்டத்தில் இதுவரைக்கும் ஏற்கப்பட்ட பயங்கரவாதம் என்னும் சொற்தொடருக்கான வரைவிலக்கணம் இல்லை என்பதினையும் சுட்டிக்காட்டிய குருபரன் குறித்த சட்டத்திலே பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணமானது மிகவும் நெகிழ்வுப் போக்கான நிலையிலே அனைத்தினையும், எதையும் உள்வாங்கலாம் என்ற தொனியிலே முன்வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுகளினைப் பிறப்பித்தல், பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாதென்ற அறிவித்தலை வழங்கல், கூட்டத்தினைக் கூட்டுவதற்குத் தடை விதித்தல் போன்ற அவசரகால தடைச் சட்டத்தினுடைய தற்காலிகக் கட்டளைகளினை மேற்கொள்ளும் விடயங்களைக் கூட நிதந்தரச் சட்டமாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகின்றது என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவையினர், அரகலய போராட்டத்தினுடைய பயனாக உருவாகிய அரசாங்கம் மீண்டும் ஒரு அரகலய உருவாகுவதினைத் தடுக்கும் விதமாக குறித்த சட்டத்தினை உருவாக்குவதாகவும், தமிழ் மக்களினுடைய அரசியற் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்கின்ற காரணத்தினால் அச்சுறுத்தும் பாணியிலான சட்ட ஏற்பாடுகளினைக் கொண்டதாக முன்மொழியப்பட்ட சட்ட வரைபு கொண்டிருப்பதாக, குறித்த சட்ட வரைபினை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியினுடைய நாடாளுமன்றக் குழுத் தலைவரும், கட்சியின் தேர்வு நிலைத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வேலன் சுவாமிகள் மற்றும் வடக்கு மாகாண சபையினுடைய முன்னாள் உறுப்பினரான சர்வேஸ்வரன், குரலற்றவர்களின் குரல் மு.கோமகன் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் இன்பம் மற்றும் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் யசோதரன், சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் உள்ளிடோர் சமூக அரசியற் செயற்பாட்டாளர்களும் கருத்துத் தெரிவித்தனர்.
பு.கஜிந்தன்