New Updates! Fresh news just arrived.

தேசிய தலைமைத்துவ நிறுவனத்தின் தொடக்க விழா: பிரதம அதிதியாக...

News

தேசிய தலைமைத்துவ நிறுவனத்தின் தொடக்க விழா: பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு!

January 25, 2026 12:44 pm
தேசிய தலைமைத்துவ நிறுவனத்தின் தொடக்க விழா: பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு!
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் அமைக்கப்படவுள்ள தேசிய தலைமைத்துவ நிறுவனம் (National Institute of Leadership – NIL) தொடர்பான திட்டத்தின் தொடக்க விழா, இன்று (24) தமரசேரி நகரில் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய பிரதித்தலைவரும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

விழாவின் போது, ஜமியா மதீனத்துன்னூர் கல்வி நிறுவனத்தினுடைய தலைவர் முப்தி முஹம்மத் அப்துல் ஹக்கீம் அஷ்ஹரி, கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.

ஜமியா மதீனத்துன்னூர் கல்வி நிறுவனத்தினுடைய முக்கிய அமைப்பாக தேசிய தலைமைத்துவ நிறுவனமானது நிறுவப்படவுள்ளதுடன், ஆன்மீகம், கல்வி மற்றும் சமூகத் தலைமைத்துவம் ஆகியவற்றினை ஒருங்கிணைக்கும் நோக்கில் குறித்த நிறுவனம் செயல்படவுள்ளது.

2001ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஜமியா மதீனத்துன்னூர் கல்வி நிறுவனமானது, இதுவரைக்கும் பல்வேறு துறைகளில் சிறந்த தலைவர்களினை உருவாக்கியுள்ளதுடன், அந்த நீண்ட பயணத்தினுடைய ஒரு முக்கிய மைல்கல்லாகவே தேசிய தலைமைத்துவ நிறுவனம் கருதப்படுகின்றது.

குறித்த நிகழ்வில், எகிப்து நாட்டை சேர்ந்த மார்க்க அறிஞர் ஷெய்க் அல்பத்ஹி மௌலானா, கேரளாவை சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள்குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்படி, ஆன்மிக விழுமியங்களோடும், அறிவார்ந்த சிந்தனையோடும், கூடிய புதிய தலைமுறை தலைவர்களினை உருவாக்குவதில் தேசிய தலைமைத்துவ நிறுவனமானது முக்கிய பங்காற்றும் என்னும் நம்பிக்கையும் இந்நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்டது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now