New Updates! Fresh news just arrived.

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் ‘பராமரிப்புப் பிரிவு...

News

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் ‘பராமரிப்புப் பிரிவு’ திறப்பு!

March 10, 2026 7:48 pm
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் ‘பராமரிப்புப் பிரிவு’ திறப்பு!
கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் நோயாளர் சேவைகளை மேலும் திறம்படவும் தடையின்றியும் முன்னெடுக்குவதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிய ‘பராமரிப்புப் பிரிவு’ (Maintenance Unit) ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் நேற்று (09) நடைபெற்ற நிகழ்வில் குறித்த பிரிவினை நாடாவெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாகத் தொடங்கப்பட்ட இப்பராமரிப்புப் பிரிவு பிராந்திய திட்டமிடல் பிரிவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளது. இதற்காக நீர்க்குழாய் தொழில்நுட்ப நிபுணர், மின்சார பழுதுபார்ப்பாளர், தச்சர் போன்ற துறைகளில் அனுபவமுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலைகளில் திடீரென ஏற்படும் மின்சாரத் தடைகள், நீரிணைப்பு கோளாறுகள் போன்றவற்றை உடனுக்குடன் சீரமைத்தல், சேதமடைந்த கட்டடப் பகுதிகள் மற்றும் தளபாடங்களை விரைவாக திருத்தியமைத்தல் ஆகியவை இப்பிரிவின் முக்கிய பணிகளாக இருக்கும்.

இப்பராமரிப்புப் பிரிவு செயல்படுவதன் மூலம் சுகாதார நிறுவனங்களில் ஏற்படும் சிறிய தொழில்நுட்ப கோளாறுகளால் நோயாளர் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்த்து, உடனடி தீர்வுகளை வழங்கும் வாய்ப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now